
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதயில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. ஆக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா. இவரிடம், கடந்த ஆண்டு இரண்டு பெண்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளி கேனல் ஷா என்பவர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் புகாரை பெற்றுக்கொண்ட அந்த எஸ்.ஐ. பாலியல் வழக்குப் பதிவு செய்யாமல் சாதாரண வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் கேனல் ஷாவின் சகோதிரிகளிடம் பாலியல் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக 20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தற்போது அவர்களிடம் மேலும் 15 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் எஸ்.ஐ. ஸ்வேதாவை கைது செய்தனர். மேலும் இந்தப் பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)