Advertisment

கணவனின் முதல் மனைவியை 50 முறை கத்தியால் குத்திய பெண்; அதிர வைத்த சம்பவம்!

Woman stabs husband's first wife 50 times in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவரது மனைவி ஜெயா(26). ஜெயாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 2021ஆம் ஆண்டு, மான்சி(22) என்ற பெண்ணை ராம்பாபுவர்மா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

இந்த நிலையில், தீபாவளி தினமான கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று, ஜெயாவுக்கும் மான்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மான்சி அங்கிருந்த கத்தியை எடுத்து ஜெயாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஜெயா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஆனால், ஆத்திரம் அடங்காத மான்சி, ஜெயாவை சுமார் 50 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜெயா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், ஜெயாவை கத்தியால் குத்திய மான்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe