Advertisment

பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு; இளைஞர் கைது

NN

ரயிலில் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நகையை பறித்து கழிவறையில் தாழிட்டுக்கொண்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சீரடியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சாய்நகர் விரைவு ரயிலில் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணித்து வந்தார். அதிகாலை 2.30 மணியளவில் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இளைஞர் ஒருவர் ஓட முயன்றார். உடனடியாக பெண் அங்கிருந்தவர்களிடம் கத்திக் கூச்சலிட்டார்.

Advertisment

அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்ற உயர் காவல்படை வீரர் அந்த இளைஞரை விரட்டிச் சென்றார். ரயில் கழிவறையில் புகுந்த திருடன் கதவை தாழிட்டுக்கொண்டான். திருடன் வெளியே வராத வகையில் பார்த்துக் கொண்டிருந்த தேவராஜ், ரயில் கர்நாடக மாநிலம் லங்கா ரயில் நிலையம் அருகில் வந்த பொழுது ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ரயில்வே போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த இளைஞரை கைது செய்தனர்.

incident police Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe