90 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய்... துணிச்சலுடன் இறங்கி நாயை மீட்ட இளம்பெண்!

கிணற்றில் விழுந்த நாயை பெண் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் உள்ள கிராமத்தில் 90 அடி ஆழம் உள்ள கிணறு ஒன்றில் நாய் தவறி விழுந்துள்ளது. பலரும் பல்வேறு முயற்சிகளை செய்தும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை மீட்க முடியவில்லை.

நாயின் நிலைமையை கண்ட பெண் ஒருவர் உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கியுள்ளார். பின்னர் மேலே நின்றவர்களின் உதவியுடன் மற்றொரு கயிறு வாயிலாக அந்த நாயை அவர் கிணற்றில் இருந்து மேலே கொண்டுவந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்கலில் வைரலாகி வருகின்றது. அந்த பெண்ணின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

dog
இதையும் படியுங்கள்
Subscribe