Skip to main content

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் உடல்! 

 

woman passes away mysteriously in mumbai

 

மும்பை குர்லா பகுதியில் உள்ள சாந்தி நகர் பகுதி சி.எஸ்.டி சாலையில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

மும்பை குர்லா பகுதியில் உள்ள சாந்தி நகரில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.டி. சாலையிலும், மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலையில் இருந்தே சி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. அதனைக் கவனித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அந்த சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில், ஓர் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 

இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது; சூட்கேஸில் இருந்த இறந்த பெண்ணின் வயது 20 முதல் 30 வரை இருக்கலாம். அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் கழுத்தில் மட்டும் நெரிக்கப்பட்ட காயம் இருக்கிறது. அவர் 24 மணி நேரத்திற்கு முன்புதான் கொலை செய்யப்பட்டிருப்பார். கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சூட்கேஸில் அடைத்து இங்கு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பெண்ணை தெரிந்தவர்கள் என யாரும் காவல்நிலையத்திற்கு வரவில்லை. 

 

இறந்த பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !