Woman passes away in kerala hospital; old boy friend arrested

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள துறவூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (42 பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண். இவருக்கு திருமணம் நடந்து முடிந்து அவரது கணவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு விஜியும் வெல்டிங் தொழிலாளியான மகேஷ்(44) என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு விஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பெற்றோர் வலியுறுத்தலின் பேரில் விஜி வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். விஜி திருமணம் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு கணவருடன் வாழ்ந்துவந்தார். ஆனால், மகேஷ் தன்னுடைய காதலி விஜியுடன் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசி வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக விஜி மகேஷுடன் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இது மகேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விஜியின் தாய் எர்ணாகுளம் அருகே அங்கமாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது தாயுடன் விஜியும் அந்த மருத்துவமனையில் தங்கியிருந்தார்.

Advertisment

இதை அறிந்த மகேஷ் நேற்று முன்தினம் அந்த மருத்துவமனைக்கு சென்று அங்கு தங்கியிருந்த விஜியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மகேஷ் திடீரென்று தான் கொண்டு வந்த கத்தியால் விஜியை சரமாரியாக குத்தி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் விஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அங்கமாலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற மகேஷை கைது செய்தனர்.