Woman MLA slapped on cheek by government official A sensation due to a viral video

Advertisment

மராட்டியத்தில் மாநகராட்சி அதிகாரியை பெண் எம்.எல்.ஏ ஒருவர் கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராமாநிலத்தில் மிரா பயந்தர் தொகுதி எல்.எல்.ஏவாக இருப்பவர் கீதா ஜெயின். சுயேச்சை எம்.எல்.ஏவான இவர் தனது தொகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் தகராறில்ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மிகுந்த கோபமடைந்த எம்.எல்.ஏ,அதிகாரிஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

மழைக்காலத்தில் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மக்களை வெளியேற்றியது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அதிகாரி சிரித்ததாக எம்.எல்.ஏ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தான் சிரிக்கவில்லை என அதிகாரி கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாஜக மேயராக இருந்த எம்.எல்.ஏ கீதா ஜெயின் கடந்த சட்டமன்றத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.