Advertisment

போலீஸ் அதிகாரியை மிரட்டிய உ.பி அமைச்சர்... விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரபிரதேசத்தில் மோசடியில் ஈடுபட்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபரும், அவரது மகனும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிறுவனம் மீது புதிதாக மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை அறிந்த மாநில சுவாதி சிங், அந்த வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர் நடத்திய உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த மிரட்டல் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மந்திரி சுவாதி சிங்கை முதல்வர் அலுவலகம் வரவைத்து கண்டனம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில டி.ஜி.பி.க்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை அறிக்கையை விரைவில் தன்னிடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

yogi adithyanath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe