ரயிலில் கவனக்குறைவாக சென்ற உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவில் கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு ரயில் படிக்கட்டில் நின்று சேட்டை செய்த இளைஞர் தண்டவாளத்துக்கு அருகில் இருந்த கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

இதே போன்று ஒரு சம்பவம் தில்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. ரயில் புறப்பட தயாரான போது செல்போனில் பேசியபடி இறங்கிய பெண் ஒருவர் பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கினார். தற்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் கால்கள் இரண்டையும்தற்போது அகற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment