Advertisment

டிக் டாக் வீடியோவால் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நரசரோ பேட் என்ற பகுதி. இங்கு 27 வயதான நரசையா என்ற நபர் தனது மனைவி சுவர்தாவை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிவருகிறார். இந்த கொலை சம்பவம் குறித்து டிஎஸ்பி எம்.வீரா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " நரசையா தனது சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து நவம்பர் 17ஆம் தேதி இந்த கொலையை செய்துள்ளார். நரசையா துண்டைக் கொண்டு சுவர்தாவின் மூச்சை நிறுத்தியுள்ளார், வெங்கையா காலை பிடித்துள்ளார். அதன்பின் அவரது உடலை பொட்லுரு சுடுகாட்டில் எரித்துள்ளனர்" என்றார்.

Advertisment

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். சுவர்தா டிக் டாக்கில் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டுள்ளார். அதற்கு நரசையா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அடிக்கடி சண்டைபோட்டுள்ளார். அதனை அவர் கண்டுகொள்ளாததால் அவரை கொலை செய்துள்ளார். டிக் டாக் பயன்படுத்துவதால் பெண்கள் கொல்லப்பட்டது ஆந்திராவில் இந்த மாதம் மட்டும் இது இரண்டாவது சம்பவமாகும்.

Advertisment

murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe