உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்பவரின் வீட்டிற்கு 40 வயது மதிக்கத்தக்கபட்டியலினசமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுடன் அவரது 20 வயது மகளும் ராஜ்குமார் சுக்லா வீட்டிற்குச் சென்றுள்ளார். ராஜ்குமார் சுக்லாவின் அறையை அப்பெண் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் சென்று பார்த்தபோது அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்துள்ளது.
பின் கதவுகள் திறக்கப்பட்டபோது அந்தப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகள் காவல்துறையினருக்குக் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்திய போலீசார், இதில் சம்பந்தப்பட்ட ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.