மத்தியபிரதேச மாநிலம் விடிவா மாவட்டத்தில் உள்ள சுஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GJH.jpg)
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை 2 தலை, 3 கைகள், 3 கைகளில் 4 உள்ளங்கைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் அனுமதித்துள்ளனர். குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)