Advertisment

'அபராதம் விதித்தால் தற்கொலை செய்துகொள்வேன்' போலீசை அலறவைத்த இளம்பெண்!

வாகன பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை மடக்கிப்பிடித்த காவல்துறையினர், அவருக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண் நூதனமாக போலீஸை மிரட்டிய சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி அபராத தொகையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய அபராதத்தொகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

Advertisment

fcgh

இந்நிலையில் டெல்லியில்இளம்பெண் ஒருவர்இருசக்கரவாகனத்தில் வந்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் பதிவு எண் பலகை இல்லாததால் வண்டியிலிருந்து இறங்குமாறுகூறியுள்ளனர். இதற்கு சம்மதிக்காத அந்த பெண், உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் விதிமுறையை மீறியுள்ளீர்கள்எனக்கூறிஅபராத ரசீதை பிரிண்ட் செய்ய முயற்சித்துள்ளனர். உடனே அந்த பெண் அபராத ரசீது கொடுத்தால் தற்கொலை செய்வேன் என்று காவல்துறையினரை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்காமல் அறிவுரைக்கூறி காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

traffic
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe