Advertisment

கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு... திருமணத்திற்கு முதல்நாள் ஆற்றில் குதித்த இளம்பெண்!

திருமணத்துக்கு முதல்நாள் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் பிஞ்சோர் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிரித்தி. தாயை இழந்த அந்த பெண் கடந்த ஒராண்டாக உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அடுத்த நாள் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

Advertisment

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடினர். இந்நிலையில் ஆற்றுப்பாலம் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போஸிசார் அங்கு சென்று பார்த்துள்ளனர். சடலமாக கிடந்த பெண் பிரித்தி என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். திருமணத்தில் அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

girl
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe