தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisment
Advertisment

இந்த விழாவில் பாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி அங்கு இருந்தவர்கள் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.