உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இளைஞர் ஒருவர் சாலையில் போகும், வரும் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக பள்ளி மாணவிகளை அந்த இளைஞர் கிண்டல் செய்தள்ளார். இதைக்கண்ட பெண் போலீஸ் ஒருவர் உனக்கெல்லாம் அம்மா, சகோதரி இல்லையா? பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்வாயா? என ஷூவை கழட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்.

Advertisment
Advertisment

சுமார் 23 முறை அந்த இளைஞனை அவர் ஷூவால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வரும் வேளையில் பெண் போலீசின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.