
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அசாமில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராணுவ அதிகாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி காலை அசாமில் சங்காச்சார் என்ற இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் கிடந்தது. அதனைக் கைப்பற்றிய அசாம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் சென்னை அடையாறைசேர்ந்த வந்தனா ஸ்ரீ என்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறுகட்ட விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் அசாம், ஜோன்ஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தில்கர்னல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த கொலையைசெய்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அப்பெண்ணுடன் முறையற்ற தொடர்பிலிருந்த பொழுது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கையில் அணிந்திருந்த காப்பால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கொலையை மறைப்பதற்காக சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியதும் தெரியவந்தது. மேலும் வந்தனா ஸ்ரீயின் குழந்தையை ரயில் மூலம் கொல்கத்தா அழைத்துச் சென்று அங்கு ஒரு பகுதியில் விட்டு விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. செல்போன் உரையாடல் மூலம் இதையனைத்தையும்உறுதிசெய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us