Advertisment

பயமா.. எனக்கா.. நாகத்திடம் மாஸ் காட்டிய சிங்கப் பெண்; வைரலாகும் வீடியோ

woman caught indian cobra

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வார்கள்.ஆனால், அது பொய் என்பது போல6 அடி நீளமுள்ள இந்தியன் கோப்ராவை கையில் வைத்து விளையாடியப் பெண்ணின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரம் அருகே எல்.ஐ.சி. நிறுவனத்தின் துணைக் கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. திடீரென டேபிள் அடியில் பாம்பு இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

Advertisment

இந்நிலையில், அலுவலகத்துக்குள் சென்ற பாம்பை பிடிப்பதற்காகதீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, தீயணைப்புத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து அலுவலகத்துக்குள் பட்டறை போட்டிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பொதுவாக, பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனக் கூறுவார்கள். ஏனென்றால், அது மிகவும் கொடிய விஷ ஜந்துக்களில் ஒன்றாகஉள்ளது. அதில், இந்தியாவில் இருக்கும் நாகப்பாம்பை தான் 'இந்தியன் கோப்ரா' என அழைப்பர். இந்த வகை பாம்பை தான் அந்த இளம்பெண் கையில் வைத்திருந்தார். 6 அடி நீளமுள்ள இந்த நாகப்பாம்பு அதன் பின்புறத்தில் மூக்கு கண்ணாடி தோற்றம் இருந்தது.

அந்தப் பெண்ணின்கையில் இருக்கும் பாம்பு சீறும்போது அங்கிருக்கும் ஊழியர்கள்பயத்தில் பின்வாங்கி நின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

India cobra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe