Advertisment

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Train woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe