Advertisment

அத்துமீறிய இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளம்பெண்!

ஆந்திர மாநிலம் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் பிரியா ரெட்டி. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் இளைஞர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அப்பெண் தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் மறுநாள் ராவி காலனியில் மீண்டும் அப்பெண்னிடம் இளைஞர் தவறாக நடந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அவனைக் கட்டிவைத்து அடித்துள்ளார். பின்னர் ஒரு ஷூவை எடுத்து தனது மனைவியின் கையில் கொடுத்து, அவரை அடிக்கும்படி கூறியுள்ளார்.

Advertisment

cn

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கூறும்போது, " கடந்த சில நாட்களாக நான் பணிக்கு செல்லும்போது என்னை அவர் பின்தொடர்ந்து வந்தார். நேற்று என்னிடம் பேசுவதற்கு முயன்றார். அதற்கு நான் இடம் கொடுக்காத நிலையில், இதுதொடர்பாக என் கணவரிடம் சொன்னேன். அடுத்த நாள் காலையில் என் வீட்டுக்கு அருகில் என்னை பார்த்துக்கொண்டு இருந்தார். இதை என் கணவரிடம் நான் தெரிவித்தேன். கோபம் கொண்ட அவர் அவரை பிடித்து மரத்தடியில் கட்டி வைத்து, என் கையில் செருப்பை கொடுத்து அடிக்க சொன்னார். சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.

attacked
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe