Advertisment

'ரயில் நிலையத்தில் திருட்டு... புறநகரில் பங்களா' சிக்கிய இளம் பெண் கைது!

மின்சார ரயில் திருடி மிகப்பெரிய வீடு வாங்கி இளம் பெண்ணை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் வாங்கிவாடி ரயில் நிலையத்தில் தொடர்ச்சியான திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளம்பெண் ஒருவர் இந்த திருட்டு காரியங்களை செய்வதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள். அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த தொடர் திருட்டு தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில், " தான் மும்பையில் உள்ள பார்களில் நடனமாடும் வேலை செய்து வந்ததாகவும், தற்போது பார்களை மூடிவிட்டதால், கடந்த சில மாதங்களாக இந்த ரயில் நிலையத்திற்கு வரும் பெண்களின் கைப்பைகளை அபகரித்துக்கொண்டு செல்வதாகவும், அதை வைத்து தற்போது புறநகரில் வீடு ஒன்றை வாங்கியுள்ளேன்" என்றும் அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe