Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!

புதுச்சேரியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வேலை தேடினார். அதில் கிடைத்த தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர் அயர்லாந்து நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரி பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3.5 லட்சம் கேட்டுள்ளார். அதன்பேரில் போனில் பேசிய நபர் கூறிய வங்கி கணக்கில் அந்த பெண் கூகுள் பே மூலம் 3.5 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து போன் நம்பரில் கூறியபடி, அந்த பெண் நேர்காணலுக்கு டெல்லிக்கு சென்று விசாரித்தபோது அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பணம் பெற்ற நபரை ஃபோனில் தொடர்புக் கொண்டு கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து அந்த பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜிடம் கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று புகார் அளித்தார். இதையடுத்து, டி.ஜி.பி. உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு எஸ்.பி நாராயண் மேற்பார்வையில், எஸ்.பி பழனிவேல் தலைமையில், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, ஏழுமலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் கோவையில் பதுங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த நாகம்மை (வயது 47) என்பவரை நேற்று முன்தினம் (23/09/2022) கைது செய்துவிசாரித்தனர். விசாரணையில் நாகம்மை மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 10 பேரிடம் ரூபாய் 45.5 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா, முத்திரை, அரசு ஆவணங்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நாகம்மையை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நாகம்மை மகன் பிரபாகரனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகம்மை மற்றும் தலைமறைவாக உள்ள பிரபாகரன் சேர்ந்து கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 25 பேரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக போலி பாஸ்போர்ட் கொடுத்து மோசடி செய்த வழக்கு கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.