ADVERTISEMENT

கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்!!

03:08 PM Jan 15, 2019 | kalaimohan

ADVERTISEMENT

குமாரசாமி அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் கடிதம் மூலம் ஆளுநருக்கு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏக்களான நாகேஷ் மற்றும் சங்கர் திரும்ப பெற்றனர்.

2 எம்எல்ஏக்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக பேரவையில் பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு அவசியம்.

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே புரிதல் இல்லாததால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஆதரவை திரும்பப் பெற்ற எம்எல்ஏ நாகேஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT