Advertisment

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸா? சிரோமணி அகாலிதளம் விளக்கம்!

bn

Advertisment

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பதவியை தங்கள் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் எனதெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக ஹர்சிம்ரத் கவுர் பாதல் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அமைச்சரவையில் இருந்து விலகியதால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை சிரோமணி அகாலிதளம் வாபஸ் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுதொடர்பாக பேசிய அக்கட்சி தலைவர் தலைவர் சுக்பீர்சிங் பாதல் மத்திய பாஜக அரசுக்கு எங்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe