Advertisment

"பிரதிநிதிகள் செய்யும் நற்காரியங்கள் குறித்து விவாதம்" - நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதியை அறிவித்த ஓம் பிர்லா!

OM BIRLA

Advertisment

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.

அதேபோல் பல்வேறு சட்டங்கள், கடும் அமளிக்கு இடையே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தச்சூழலில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த பரிந்துரைத்தது. இந்தநிலையில் மக்களவை சபாநாயர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர், "குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது. அவை சுமுகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறேன். அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன், தங்கள் தொகுதிகளில் பிரதிநிதிகள் மேற்கொண்டுள்ள நற்காரியங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது" எனத்தெரிவித்துள்ளார்.

LS SPEAKER OM BIRLA Parliament winter session
இதையும் படியுங்கள்
Subscribe