wine in wedding tambula bag

Advertisment

அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரசாணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதில் திருமண நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் அனுமதி பெற்று டெபாசிட் கட்டி மது விருந்துகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலப் பையில் மது பாட்டிலை சேர்த்து மணமகள் வீட்டார் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த நிர்மல் என்பவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் நடந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து வந்த மணமக்களின் உறவினர்களுக்கு தாம்பூலப் பையில் மணமகள் வீட்டார் மது பாட்டிலை வைத்துக் கொடுத்தனர். வெற்றிலை, பழம், இனிப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மது பாட்டிலும் கொடுக்கப்பட்டது சற்று அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.