Advertisment

'முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பா?'-ரயில்வே விளக்கம்

railway

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் இடம்பெற்றுள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கு என இருந்த நிலையில் அதை இரண்டாக குறைத்து இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதில் ஏசி 3 டயர் பெட்டிகளை இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு முன்பதிவில்லா பெட்டியில் சராசரியாக 350 பேர் பயணிக்க முடியும் என்ற சூழல் இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 600 முதல் 700 டிக்கெட்களை வழங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கமான 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!' என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இரண்டாம் வகுப்பு பெட்டிகள் எண்ணிக்கை மார்ச் முதல் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் பொய்யானது, ஆதாரமற்றது' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Announcement railway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe