Advertisment

ஆவி பிடித்தல் கரோனாவை விரட்டுமா? - என்ன சொல்கிறது மருத்துவ உலகம்?

steam inhalation

Advertisment

கரோனாஇரண்டாம் அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில், ஆவி பிடித்தல் கரோனாவை அழிக்கும் என்ற செய்திகள் வேகமாகப் பரவிவருகிறது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரப்படும் பல பதிவுகள், கரோனவைஒழிக்க, 15 நிமிடம் வரையோ அல்லது ஒருவரால் முடியும் வரையோ ஆவி பிடிக்குமாறுமக்களை அறிவுறுத்துகின்றன. சில பதிவுகளில் ஆவி பிடிக்கையில், சூடான நீரில் வேம்பு, இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், ஆவி பிடித்தல் கரோனாவைஅழிக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. உலக சுகாதார நிறுவனமோ, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமோஅல்லது உலகின் வேறு எந்த மருத்துவ ஆய்வு நிறுவனமோஆவி பிடிப்பதால் கரோனாஅழியும் என எந்த கண்டுபிடிப்பையும் வெளியிடவில்லை. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய நிபுணர், “ஆவி பிடித்தல் கரோனாவைவிரட்டும் என கூறும் எந்த ஆய்வு முடிவையும் நான் கேள்விப்பட்டதில்லை” என கூறியுள்ளார்.

அதேநேரத்தில், ஆவி பிடித்தலால்தீங்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றன சர்வதேச ஆய்வுகள்.ஸ்பானிஷின் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், அதிகளவில் ஆவி பிடித்தாலும், மூச்சுக்குழாயில் தீக்காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. தலைக்குமேல் துண்டை போர்த்திக்கொண்டுஆவி பிடிக்கும் பொதுவான நடைமுறையும் ஆபத்தானது என அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

Advertisment

மணிபால் மருத்துவமனைகளின் நுரையீரல் துறைத்தலைவர் சத்யநாராயணா, ஆவி பிடிப்பது கரோனவைவிரட்டும் என்பது அடிப்படை ஆதாரமற்றது என்பதோடு, அது அதிகமாகும்போதுமூச்சுக்குழாயை சிதைத்துவிடும் என்றும், அதனால் ஆஸ்துமா அறிகுறிகளும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Treatment corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe