prahalad patel

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (22.04.2021) ஒரேநாளில்3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், கரோனாவால்பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்தனர். மேலும், டெல்லிஉள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன.டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாகதீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும்தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தநிலையில், மத்திய கலாச்சாரமற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல், தனது சொந்த தொகுதியானமத்தியப் பிரதேசத்தின் தாமோவில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் தனது தாய்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு ஆவேசமாக பேசினார்.

Advertisment

ad

அவருக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர், “இவ்வாறு பேசினால்இரண்டு அறை கிடைக்கும்” என்றார். இருப்பினும் ஆக்ஸிஜன் கேட்ட நபர், அடிவாங்க தயாரென்றும், தனது தாயாருக்கு ஆக்ஸிஜன் வழங்க வேண்டுமென்றும்என பதிலளித்தார். மேலும், அவரது தாயாருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் இரண்டு மணி நேரமேநீடித்ததாககூறினார்.

தாயாருக்கு ஆக்ஸிஜன் கேட்ட நபரை அறைவேன் எனமத்திய அமைச்சர் கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “யாரும் உதவி செய்ய மறுக்கவில்லை. ஆனால் அந்தநபர் ஒழுங்காக பேசியிருக்க வேண்டும்” என பிறகு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisment