Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இமாச்சலப்பிரதேசத்தில்கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில், அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராதசுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisment

இந்த தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா, எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத்தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. அதில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில்பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி. சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேரும், பா.ஜ.க வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை நம்பி தேர்தலில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இதற்கிடையே, இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒரு வேட்பாளர் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

Advertisment

அதனைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவையில்தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார்.

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இதற்கிடையே, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப்பொறுப்பு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால், அங்கு அரசியல் குழப்பம் பூதாகரமாக வெடித்தது. இதனை அறிந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் உடனடியாக இமாச்சலப்பிரதேசத்துக்கு சென்றுராஜினாமா செய்வதாக அறிவித்த விக்ரமாதித்ய சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அதே வேளையில், இமாச்சலப்பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகத்தகவல் பரவி வந்த நிலையில், அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் அரசு இமாச்சலப்பிரதேசத்தில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (29-02-24) இமாச்சலப்பிரதேச சட்டசபை கூடியது. அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டார். மேலும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 6 பேரின் பதவியும் பறிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். மொத்தம் 68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தால் சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையைவிட கூடுதலாக காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியானது காப்பாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

 Will the Congress complete the rule and Political situation in Himachal pradesh

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், இமாச்சலப்பிரதேச முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் திடீரென போர்க்கொடிஉயர்த்தியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரும்இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மனைவியுமான பிரதிபா சிங் நேற்று (29-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தேர்தலில் அந்த 6 எம்.எல்.ஏக்கள் கட்சி மேல் உள்ள வருத்தத்தில் தான் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். ஓராண்டுக்கு மேலாகியும் அவர்களின் குரல்களுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை. அவர்களை என்றாவது ஒரு நாள் அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது. நாங்கள் பலமுறை கட்சி மேலிடத்தில் பேசினோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லை. விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.