Skip to main content

துப்பாக்கி முனையில் சவுரிமுடி கொள்ளை! - விரட்டிப்பிடித்த போலீஸ்

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
Sauri

 

 

 

வேண்டாதவர்களை மட்டம்தட்ட, இழித்துரைக்க கூறப்படும் வார்த்தைகளில் ஒன்று ‘மயிரே’. ஆனால் அந்த தலைமுடிக்கு எத்தனை மதிப்பிருக்கிறது தெரியுமா? திட்டமிட்டு துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தலைமுடியை, போலீஸ் வந்து மீட்டுக்கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது.
 

அஜய்குமார் டெல்லியைச் சேர்ந்த சவுரிமுடி வியாபாரி. வியாபாரத்தில் நொடித்திருந்த குமாருக்கு யோசனை நேர்வழியில் செல்வதற்குப் பதில் குறுக்குவழியில் சென்றது. டெல்லியின் நங்ளோயி பகுதியைச் சேர்ந்த ஹூசைன், தாஜுதீன் சகோதரர்கள் நடத்திய ஜஹாங்கீர் என்டர்பிரைசஸ்மீது குமாரின் கவனம் திரும்பியது. 
 

தனக்குக்கீழ் பணிபுரிந்த மங்கள்சென் என்பவனை ஜூலை 25-ஆம் தேதி அங்கு அனுப்பி நோட்டம்விட்டார். சென், ஒரு வாடிக்கையாளர் போலச் சென்று அங்கே கணிசமாக முடியிருப்பதைத் தெரிந்துகொண்டுவந்து சொன்னான். இரண்டு நாள் இடைவெளிவிட்டு ஜஹாங்கீர் என்டர்பிரைசஸுக்கு குமார், சென் மற்றும் ஒரு கூட்டாளி என மூவர் துப்பாக்கி, கத்தி சகிதம் சென்றனர். தாஜுதீன், ஹூசைனை அடித்துக் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த 200 கிலோ தலைமுடியை கொள்ளையடித்துச் சென்றனர்.
 

 

 

ஹூசைன் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். காவல்துறை வலைவிரித்துக் காத்திருந்தது. எதிர்பார்த்துபோலவே சென் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரில் சிக்கினான். அவனைப் பிடித்துவந்து காவல்துறைக்கே உரிய முறையில் விசாரித்ததில், சுல்தான்புரியில் உள்ள பாஸ் குமாரின் இல்லத்தில் கொள்ளையடித்துச்சென்ற முடி இருப்பதை கூறினான். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, கத்தியும் கைப்பற்றப்பட்டன. 
 

அது இருக்கட்டும் கடத்தப்பட்ட 200 கிலோ முடியின் விலை என்ன தெரியுமா? தோராயமாக ரூ.25 லட்சமாம். இனிமேல் சலூன் கடையில் முடிவெட்ட உட்காரும்போது, வெட்டிய முடியை நம் கைவசம் கொடுத்துவிடவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்தான் நாற்காலியில் உட்காரவேண்டும். 

 

சார்ந்த செய்திகள்