/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_196.jpg)
கணவனைக் காதலித்த பெண்ணுக்கு உறவினர்கள் முன்னிலையில் மனைவியே திருமணம் செய்துவைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், உக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாசரி சுரேஷ். இவருக்கும் சரிதா என்பவருக்கும் சில வருடங்களுக்குமுன் திருமணம் நடந்தது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த மாமன் மகள் சந்தியா மாற்றுத்திறனாளி ஆவார். இவர் சரிதாவின் கணவன் தாசரி சுரேஷைக் காதலித்துள்ளார். இந்த விஷயத்தை சரிதாவிடம் தெரிவித்தார் சந்தியா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_189.jpg)
இதனைத் தொடர்ந்து, தன் கணவர் சுரேஷுக்கும் சந்தியாவுக்கும் உறவினர்கள் முன்னிலையில் மார்க்கண்டேயா தேவஸ்தானம் என்ற கோவிலில் வைத்து திருமணம் செய்துவைத்தார் சரிதா. செய்தியாளர்களிடம் பேசியசரிதா “மாற்றுத்திறனாளியான சந்தியா என் கணவனை விரும்புவதாக சொன்னார். அதனால்தான், மனிதாபிமானத்துடன் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தேன். சந்தியாவை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே, திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அழைத்துவந்தேன்.” என்றார் கரிசனத்துடன்.
கணவனின் காதலிக்கு மரியாதை செய்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சரிதா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)