Advertisment

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

 wife who incident and buried her husband along with the boy friend

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜூதன் - உத்தரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில்மகதோ என்பவருடன் உத்தராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருங்கிப் பழகிய இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து வாழவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த விவகாரம் ஜூதனுக்கு தெரியவர, மனைவி உத்தராவை அழைத்து கடுமையாகக் கண்டித்துள்ளார். இதையடுத்து தங்கள் உறவுக்கு எதிராக இருப்பதால் கணவரை கொலை செய்த முடிவு செய்த உத்தரா, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஜூதனை அழைத்து வந்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த உத்தராவின் ஆண் நண்பர் மகதோ ஜூதனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் ஜூதனின் உடலை உத்தரா வீட்டின் கழிவறை அருகே குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் புதைக்கும் முன் தடயம்இருக்கக்கூடாது என்பதற்காக உடலின் மீது உப்பைத்தூவிப் புதைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், ஜூதன் காணாமல் போயுள்ளார் என்று நினைத்த அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ், சந்தேகத்தின் பேரில் ஜூதனின் மனைவி உத்தராவிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின் உத்தராவை போலீஸ் கைது செய்த நிலையில், மகதோ தலைமறைவானார். போலீசார் தொடர்ந்து தீவிரமாகத்தேடி வந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

husband woman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe