Advertisment

குளிக்காத மனைவி - விவாகரத்து கோரும் கணவர்!

கத

மனைவி தினமும் குளிப்பதில்லை என்று கூறி கணவர் ஒருவர் விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக சூறாவளி சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் இளைஞர் மாலை வீடு திரும்பும்போது, மனைவி காலையில் பார்த்தவாறே பல நாட்கள் இருந்ததால்அதிருப்தி அடைந்த அந்த இளைஞர், “ஏன் இவ்வாறு இருக்கிறாய்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சரியான பதிலை அவருடைய மனைவி கூறவில்லை.

Advertisment

அந்த இளைஞர் பல நாட்களாகமனைவியிடம் கூறியும் அவர் தொடர்ந்து அதே உடை, கலைந்த முடி என தொடந்து அப்படியே இருந்துள்ளார். இதனால் அலுவலகத்துக்கு சில நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு வீட்டிலிருந்து மனைவியின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது, அவர் தினமும் குளிப்பதில்லை என்பதைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், “தினமும் குளிக்காமல் இத்தனை நாட்களாக என்னை ஏமாற்றினாயா?” என்று கேட்டுள்ளார். மேலும், குளிக்காத மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கித் தரக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிடவே, சமூக ஆர்வலர்கள் அவருக்கு கவுன்சிலிங் அளித்துவருகிறார்கள்.

Advertisment

divorce
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe