A wife who cut off her husband's in delhi

தலைநகர் டெல்லியில் சேர்ந்தவர்கள் தம்பதி. இவர்களுக்கிடையே நேற்று திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது கணவரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்துள்ளார்.

Advertisment

இதில் படுகாயமடைந்த அந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகி இருக்கும் அந்த பெண்ணை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment