nn

முதலிரவு நடக்காததை மனைவி வெளியே சொன்னதால் ஆத்திரப்பட்ட கணவர் புதுமணப் பெண்ணை வெட்டிக் கொன்றதோடு அவரது அம்மாவையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச்சேர்ந்தவர் சரவணன். பி.டெக் படித்துள்ள சரவணன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். சரவணனுக்கும் தெலுங்கானாவில் வனபாத்தி பகுதியைச் சேர்ந்த இருபது வயது ருக்மணி என்றபெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தையடுத்து அன்று இரவே மணப்பெண் ருக்மணியின் வீட்டில்முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடைபெறவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சரவணன் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதிர்ச்சியடைந்த மணப்பெண் இதனை அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மணப்பெண்ணின் பெற்றோர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல்பெண்ணின் உறவினர்களுக்கு எப்படியோ கசிய அவர்கள் சரவணனை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சரவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளனர். இதனை அறிந்து சரவணனின் பெற்றோர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவி ருக்மணியை மாடிக்குஅழைத்துச் சென்ற கணவன் சரவணன் தான்மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளார். அதேபோல் ருக்மணியின் தந்தை வெங்கடேஷ்வரலு, அவரது தாயார் ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெங்கடேஷ்வரலு ரத்தக் காயத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவத்தில் மணப்பெண் ருக்மணியும்அவரது தாயார் ரமாதேவியும் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத்உள்ளிட்ட இந்தக் கொலை தொடர்பாக பலரைகைது செய்துள்ளனர்.

Advertisment