கணவரை கொன்று அடுப்படியில் புதைத்த மனைவி!

மத்தியப் பிரதேசம், அனுப்பூர் மாவட்ட பகுதியில், கடந்த மாதம் மகேஷ் பனவால் என்பவர் கரோண்டி கிராமத்தில் இருந்து காணாமல் போனதாக, அவரது மனைவி பிரமிளா என்பவர் ஒரு புகாரை காவல்நிலையத்தில் கொடுத்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக காணாமல் போனவருடைய அண்ணன் அர்ஜூன் பனவால் தற்போது அவருடைய அண்ணி மீது புகார் தெரிவித்துள்ளார்.அதில், அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் எப்போதெல்லாம் தனது சகோதரர் மகேஷைப் பார்க்கச் சென்றாரோ அப்போதெல்லாம், பிரமிளா அவர்களை வீட்டுக்குள்ளே வர விடாமல் திசைமாற்றி பேசி அனுப்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் பிரமிளாவின் வீட்டை சோதித்தில், அங்கு பிணவாடை வீசியுள்ளது.

அப்போதுதான் கிச்சனில் புதைக்கப்பட்ட மகேஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பின் பிரமிளா, தன் கங்காராம் என்பவருடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்று கிச்சனில் புதைத்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் கங்காராம், இந்த கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார்.

murder
இதையும் படியுங்கள்
Subscribe