Advertisment

கணவரின் திருமணத்தை மீறிய உறவு; தசரா பண்டிகையின் மனைவி செய்த செயல்!

The wife burned the effigy of her husband's family

Advertisment

நாடு முழுவதும் நேற்று முன் தினம் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது ராவணனுக்கு பதிலாக கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் உருவ பொம்மையை மனைவி எரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் தீட்சித். இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே சகோதரியின் தோழியான புஷ்பாஞ்சலி என்ற பெண்ணுடன் சஞ்சீவ் தீட்சீத் பழகி வந்துள்ளார். அவர்களது பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம், பிரியங்காவுக்கு தெரியவர, மனைவியை விட்டு பிரிந்து புஷ்பாஞ்சலியுடன் சஞ்சீவ் வாழத் தொடங்கியுள்ளார். இது குறித்து கணவரின் குடும்பத்தினரிடம் பிரியங்கா கேட்டாலும், அவர்கள் பிரியங்காவுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துள்ளனர்.

இந்த நிலையில், தான் நேற்று முன்தினம் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, கணவரின் வீட்டின் முன்பே, கணவர் புகைப்படத்தையும், அவரின் குடும்பத்தினரின் புகைப்படத்தையும் உருவபொம்மையாக வைத்து பிரியங்கா தீ வைத்து எரித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து பிரியங்கா கூறுகையில், ‘எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எனது வனவாசம் முடிவுக்கு வரவில்லை. கணவர் மற்றும் மாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

incident effigies
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe