Skip to main content

காதலியுடன் தனிமையில் இருந்த ஏட்டு! ஆவேசத்தில் செருப்பால் அடித்த மனைவி!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021
Wife beaten by police sandals

 

காதலியுடன் உல்லாசமாக இருந்த தலைமை காவலரை அவரது காதல் மனைவி செருப்பால் சரமாரியாக  அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்த்ராத்திரி கொத்தகூடம் 6வது பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் ஸ்வப்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ராஜேஷ் தனது காதல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஸ்வப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 

இந்நிலையில் ராஜேஷுக்கு பொல்லோரி கூடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். தனது வீட்டுக்கு செல்வதை தவிர்த்தும் வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஸ்வப்னா இது பற்றி கணவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லையாம். இதற்கிடையில் கணவரின் தகாத தொடர்பை அறிந்த ஸ்வப்னா ராஜேசை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் தனது காதலி உடனான தொடர்பை கைவிடவில்லை. இதே போல் நேற்றும் ராஜேஷ் வீட்டுக்கு வராமல் தனது காதலி வீட்டில் இருந்ததாக தெரிகிறது.

 

இதை அறிந்து ஆத்திரமடைந்த ஸ்வப்னா தனது கணவரும், காதலியும் இருக்கும் வீட்டிற்கு மகளிர் சங்கத்தை சேர்ந்த சில பெண்களுடன் சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஸ்வப்னா இருவரையும் கையும், களவுமாக சுற்றி வளைத்தார். பின்னர் தனது கணவர் ராஜேசை ஸ்வப்னா செருப்பால் சரமாரி தாக்கி உள்ளார். பின்னர் ராஜேசை மகளிர் சங்கத்தின் உதவியுடன் போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரரான தனது கணவரை மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.