Wife beaten by police sandals

காதலியுடன் உல்லாசமாக இருந்த தலைமை காவலரை அவரது காதல் மனைவி செருப்பால் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்த்ராத்திரி கொத்தகூடம் 6வது பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் ஸ்வப்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ராஜேஷ் தனது காதல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஸ்வப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் ராஜேஷுக்கு பொல்லோரி கூடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். தனது வீட்டுக்கு செல்வதை தவிர்த்தும் வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஸ்வப்னா இது பற்றி கணவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லையாம். இதற்கிடையில் கணவரின் தகாத தொடர்பை அறிந்த ஸ்வப்னா ராஜேசை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் தனது காதலி உடனான தொடர்பை கைவிடவில்லை. இதே போல் நேற்றும் ராஜேஷ் வீட்டுக்கு வராமல் தனது காதலி வீட்டில் இருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்து ஆத்திரமடைந்த ஸ்வப்னா தனது கணவரும், காதலியும் இருக்கும் வீட்டிற்கு மகளிர் சங்கத்தை சேர்ந்த சில பெண்களுடன் சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஸ்வப்னா இருவரையும் கையும், களவுமாக சுற்றி வளைத்தார். பின்னர் தனது கணவர் ராஜேசை ஸ்வப்னா செருப்பால் சரமாரி தாக்கி உள்ளார். பின்னர் ராஜேசை மகளிர் சங்கத்தின் உதவியுடன் போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரரான தனது கணவரை மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment