ghj

மும்பையில் கணவனை கொலை செய்து மாடியில் இருந்து தூக்கிய வீசிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மும்பையின் அம்போலி பகுதியைச்சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணன். 52 வயதான இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். நல்ல வசதி வாய்ப்புள்ள இவருக்கு கீதா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 7-வது மாடியில் வசித்து வந்த சாந்தனு கிருஷ்ணன், வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகமனைவி கீதா போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பேசியதால் அவரின் மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கணவரை சொத்துக்கு ஆசைப்பட்டு மகனுடன் சேர்ந்துகொலை செய்து மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக கீதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரின் மனைவி மற்றும் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.