/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage_62.jpg)
பல கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் புகுந்த பெண், கணவரின் செயலால் விவாகரத்து கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த பெண்ணுக்கு, ராஜேஷ் என்பவருடன் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேஷ், மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கும் பழக்கம் கொண்டவர். மற்ற நாட்களில், அவர் கங்கை நீரை தெளித்துக்கொண்டு அன்றைய நாளை கழித்துவிடுவார். இதனால், கணவரிடம் இருந்து உடல் துர்நாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் மனைவி அவரை குளிக்க சொல்லி பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதன் பேரில், மட்டும் 40 நாட்களில் 6 முறை மட்டுமே ராஜேஷ் குளித்திருக்கிறார்.
பொறுத்து பொறுத்து பார்த்த மனைவி, ஒரு கட்டத்தில் கணவரிடம் இருந்து பிரிந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், தன் கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில், காவல்துறையினர் ராஜேஷிடம் விசாரித்ததில், நடந்த சம்பவங்கள் வெளிவந்தது. இறுதியில், தினமும் குளிப்பதாகவும், சுகாதாரத்தை மேம்படுத்துவதாகவும் ராஜேஷ் ஒப்புக்கொண்டாலும், அவருடன் வாழ மனைவிக்கு விருப்பமில்லை. இதனால், உத்தர பிரதேச மாநில நீதிமன்றத்துக்கு சென்று விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)