Advertisment

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏன்? - நிதி ஆயோக் விளக்கம்!

dr vk paul

இந்தியாவில் கரோனாதடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மீது கரோனாதடுப்பூசி சோதனையும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், தடுப்பூசி செலுத்தப்படுவதில்இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளதாககூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர், "தரவுகள் படி இந்தியாவில் 17.2 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் குறைந்தது ஒரு டோஸாவது செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் நாம் அமெரிக்காவை முந்தியுள்ளோம்என தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் வி.கே.பால், "கோவாக்சின் மற்றும்சைடஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

Advertisment

மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலகசுகாதார நிறுவனம், அவசர காலஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்தகேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள்பாரத் பயோடெக் மற்றும் உலகசுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த மைல்கல் விரைவில் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.

corona virus coronavirus vaccine covaxin NITI AAYOG world health organaization
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe