Advertisment

ஏன் இந்த வெள்ளை கோலம்?- இளைஞர் சொன்ன காரணத்தால் அதிர்ந்த போலீசார்

Why this white golem?- The youth who created a sensation

கேரளாவில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களை பெறும் 'நவ கேரளாசதாஸ்' என்ற திட்டம் கேரளாவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சாலையில் பொதுமக்களை நோக்கிச் செல்லும் பொழுது சில இளைஞர்கள் மற்றும் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுவோர் கைது செய்யப்படுவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு வர இருந்தார். அப்போது அந்த பகுதியில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் வினோதமான போராட்டம் ஒன்றில் இறங்கினார்.

தலைமுடி உள்ளிட்ட உடலில் மொத்தத்திற்கும் வெள்ளை பெயிண்ட் பூசி கொண்ட இளைஞர் வெள்ளை உடை அணிந்து கொண்டார். கருப்பு நிறத்தில் இருப்பதால் முதல்வர் செல்லும் வழியில் சென்றால் தன்னை கைது செய்து விடுவார்கள். எனவே உடல் முழுவதும் வெள்ளை நிறத்தை பூசிக் கொண்டதாகவும், அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் வரும் நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின்தகவல் தெரிய வர, அதிர்ந்த கேரள போலீசார்அந்த நபரை அங்கிருந்து அகற்றினர்.மேலும் அந்த இளைஞர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கேரள போலீஸாரிடம் அந்த இளைஞர் வெள்ளை பெயிண்ட் அடித்தபடி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

police struggle Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe