சன்னி லியோனை அப்படியே பார்க்காதீர்கள்! - ஹர்தீக் பட்டேல் 

சன்னி லியோனின் கடந்த காலத்தை மட்டுமே வைத்து பார்க்கக்கூடாது என ஹர்தீக் பட்டேல் வலியுறுத்தியுள்ளார்.

Hardik

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் பேரணி ஒன்றை நடத்துவதற்காக பட்டேல் சமுதாய மக்களின் தலைவர் ஹர்தீக் பட்டேல் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். சன்னி லியோன் பற்றி அவரிடம் கேட்டபோது,

‘ஏன் சன்னிலியோனை அவரது பழைய காலத்தை வைத்து பார்க்காமல், ஒரு நடிகையாக நம்மால் பார்க்கமுடியாது? நர்கிஸ், மாதுரி தீக்ஸித் மற்றும் ஸ்ரீதேவியைப் போல அவரையும் ஒரு நடிகையாக பார்ப்பதில் நமக்கென்ன பிரச்சனை இருக்கிறது? ஒருவேளை நம்மால் அது முடியாது என்றால், நாம் இன்னமும் அவரை பழைய இமேஜில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றே அர்த்தம். அந்த எண்ணம் தொடருமானால் இந்த நாட்டை யாராலும் மாற்றமுடியாது’ என பேசியுள்ளார். நடிகை சன்னி லியோன் தனது தொடக்க காலத்தில் ஆபாச படங்களில் நடத்துவந்தார். தற்போது பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நடிகையாக செயல்பட்டு வருகிறார். தான் ஒரு நடிகையாக மாறினாலும், தனது கடந்த காலத்தைக் குறித்து இன்னமும் விமர்சிப்ப்பவர்களுக்கு சன்னி லியோன் நேரடியாக பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஹர்தீக் பட்டேல் இதுகுறித்து பேசியுள்ளார்.

Bollywood hardik patel Narendra Modi sridevi sunnyleone
இதையும் படியுங்கள்
Subscribe