Advertisment

இரயில் கட்டணத்தை உயர்த்தியது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் விளக்கம்!

piyush goyal

கரோனாஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, இந்தியாவில்ரயில் சேவைபழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தநிலையில் குறைந்ததூரம் இயங்கும்பயணிகள் ரயில்களின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டணஉயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில் குறைந்ததூர பயணிகள் இரயில்களின் கட்டணஉயர்வு குறித்து, இரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கட்டணஉயர்வு குறித்துரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதிலிருந்து மக்களைத் தடுக்கும்பொருட்டு, குறைந்ததூர ரயில்களில் சற்று அதிகமான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாபரவல்இன்னும் இருக்கிறது. இந்த சற்று அதிக கட்டணமானது, ரயில்களில் கூட்டம் வருவதைத் தடுக்கவும்,கரோனா பரவுவதைத் தடுக்கவும் ரயில்வேயால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

தேவையற்ற பயணங்களைத் தடுப்பதற்காக, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது, ரயில் பயணிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ticket price railway Piyush Goyal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe