Advertisment

நேதாஜி பற்றிய பிரதமர் மோடியின் உரையை ஏன் கவனிக்க வேண்டும்...?

இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன்பு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 'ஆசாத் ஹிந்து' என்ற தற்காலிக அரசை 21 அக்டோபர் 1943-ஆம் ஆண்டு அறிவித்தார். அந்த நாளை ஒவ்வொரு வருடமும் வீர வணக்க நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில் அதன் 75-வது ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி நேற்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் டெல்லி 'சாணக்யபுரி' எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நினைவிடம் மற்றும் அருங்காட்சியாதை திறந்துவைத்தார். அப்போது அவர் "சுதந்திர போராட்டத்தின்போது ஒரு குடும்பத்தின் புகழ் பாடுவது பாரபட்சமானது. பல்வேறு தலைவர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களின் தியாகங்கள் மறக்கப்பட்டுள்ளன. சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு நேதாஜி முன்னுதாரணமாக விளங்குகிறார்.

Advertisment

mm

இராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. இராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. நேதாஜி கனவு கண்ட வகையில் இந்திய இராணுவத்தை பலப்படுத்தி வருகிறோம். நேதாஜியை நினைவுகூரும் வகையில் பேரிடர் காலங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசிய விருது வழங்கப்படும். இந்த விருதுகள் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23-ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இருமடங்கு பலத்துடன் பதிலடி கொடுப்போம். தற்காப்புக்காக மட்டுமே நாம் இராணுவ பலத்தை அதிகரித்துவருகிறோம். நேதாஜியின் கனவை நனவாக்கும் வகையில் இராணுவத்தின் நிரந்திர பணிகளில் பெண்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் முதல் முறையாக பெண் அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார்" என்று பேசினார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தல்கள் அறிவித்திருக்கும் நிலையில் மோடியின் இந்த உரை கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. பாஜக-ன் துவக்ககாலத்தில் வீர் சாவர்க்கர் அதன் பின் சர்தார் வல்லபாய் படேல் என்று துவங்கி இரண்டு மூன்று ஆண்டுகளாக அம்பேத்கரை பற்றி பேசியது. அந்த வகையில் தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பேச துவங்கியுள்ளது. மேலும், இரஃபேல் விவாகரம் குறித்து விவாதங்கள் நாடடைபெற்று வரும் நிலையில் இந்த உரையில் இராணுவத்தை பலப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன என்று பேசியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டியது.

subash santhira bose modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe