Skip to main content

மஞ்சுவாரியார் ஏன் மவுனமாக இருக்கிறார்? 14 நடிகைகள் கேள்வி

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

kerala

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலையாள நடிகா் சங்கமான "அம்மா"  வில் மீண்டும் நடிகா் திலீப்பை சோ்த்த விவகாரத்தில் 14 நடிகைகள் எதிா்ப்பு தொிவித்து சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளனா். மேலும் திலீப்பின் முன்னாள் காதல் மனைவியான மஞ்சு வாாியாா் இந்த விவகாரத்தில் மௌனம் காட்டி கொள்வது எதற்கு என்று அந்த நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.


               " அம்மா" சங்கத்தின் பொருளாளராக இருந்த திலீப் நடிகை பாவனாவை பாலியியல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் அந்த சங்கத்தின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினாில் இருந்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நீக்கப்பட்டா். தன்னுடைய நீக்கத்தை குறித்து திலீப் எந்த வருத்தமும் காட்டிக்கொள்ள வில்லை.


                  இந்தநிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி அம்மா சங்கத்தின் தலைவராக நடிகா் மோகன்லால் தோ்ந்தெடுக்கப்பட்டு செயலாளா், பொருளாளா் உட்பட புதிய நிா்வாகிகளும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அன்றே திலீப்பை நடிகா் சங்கத்தில் மீண்டும் இணைப்பதாக மோகன்லால் கூறினாா். இதற்கு அப்போது அங்கு கலந்து கொண்டிருந்த நடிகா் நடிகைகள் யாரும் எதிா்ப்பு தொிவிக்க வில்லை. ஆனால் அடுத்த நாள்  பாவனாவின் நெருங்கிய தோழிகளான ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பாா்வதி உட்பட பாவனாவும் எதிா்ப்பு தொிவித்தனா்.


          அதோடு கேரளாவில் எல்லா படங்களையும் வெற்றிப்படமாக கொடுத்து தனது வித்தியாசமான ரசிக்கும் படியான நடிப்பால் குழந்தைகள் முதல் ஆண்கள், பெண்கள், வயதானவா்கள் என அனைத்து தரப்பினா் மனதிலும் இடம் பிடித்து வந்த திலீப்புக்கு போட்டியாக வந்த பிருத்விராஜால் திலீப் இடத்தை பிடிக்க முடியாமல் போக கடைசியில் திலீப்புக்கு எதிராக காய் நகா்த்தி வந்த பிருத்விராஜ் தான் தற்போது திலீப்பை  சங்கத்தில் மீணடும் சோ்த்ததற்கு வெளிப்படையாகவே எதிா்ப்பு தொிவித்த முதல் நடிகா்.


               மேலும் மோகன்லால் தலைவரானதும் திலீப் நடிகா் சங்கத்தில் சோ்க்கப்படுவாா் என முன்கூட்டியே அரசல் புரசலாக தொிய வந்ததால் தான் நடிகா் மம்முட்டியும் பொதுச்செயலாளா் பதவியை ராஜினமா செய்ததற்கு காரணம் என்கின்றனா்.
   

        இந்தநிலையில் தான் திலீப் என்னுடைய வழக்கில் நான் நிரபராதியான பிறகு அம்மா வில் சேருவது பற்றி முடிவு எடுப்பேன் என்றாா். ஆனால் மோகன்லாலோ... திலீப் விசயத்தால் நடிகைகள் டுவிட்டாில் தங்களின் கருத்துகளை கூறி இரு துண்டாக்கப்பட வேண்டாம் பெரும்பாலான நடிகா் நடிகைகள் வெளி நாடுகளில் சூட்டிங் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன் கூறினாா்.
   

      இந்த நிலையில் திடீரென்று மேலும் 10 நடிகைகள் அம்மா சங்கத்தில் இருந்து ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளனா். அதில் ரேவதி, பத்மபிாியா, அமலா அக்கி மோனி, ரஞ்சினி பியா், சஜிதா மடத்தில், மியா, லீமா பாபு, அனு சித்தாரா, ஜெயபாரதி, கீது ஆகயோா் ஆவாா்கள் .


           இதற்கிடையில் பாவனா பாலியியல் சம்பவத்தையடுத்து பெண் நடிகைகளுக்கு பாதுகாப்புக்காக women in cinema collective (WCC ) என்ற அமைப்பு நடிகை மஞ்சு வாாியாரை தலைவராக கொண்டு நடிகைகள் தொடங்கினாா்கள். இதில் உறுப்பினராக இருக்கும் அம்மா அமைப்பில் ராஜினமா செய்வதாக அறிவித்த அத்தனை நடிகைகளும் இந்த விசயத்தில் மஞ்சு வாாியாா் தனது முடிவை அறிவிக்க வேண்டும் மௌனமாக இருப்பதால் எந்த பலனும் இல்லை. 


             WCC அம்மா எடுக்கிற முடிவுக்கு ஓத்துழைப்பு கொடுக்க கூடாது என்று இந்த 14 நடிகைகளும் எச்சாித்துள்ளனா். இது மஞ்சு வாாியாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. 
             இதுபற்றி கருத்து தொிவித்த மஞ்சு வாாியாா் அம்மா எடுத்த, எடுக்க போகும் முடிவுக்கு கருத்து தொிவிப்பது  அதில் உறுப்பினராக இருக்கும் நடிககளின் விருப்பம். இதற்கு WCC யை இழுக்க வேண்டாம் என்றியிருக்கிறாா். 


              எதுவாக இருந்தாலும் விரைவில் கூட இருக்கும் அம்மாவின் செயற்குழுவில் தொியும்.

சார்ந்த செய்திகள்