Skip to main content

முன்கூட்டியே குஷ்பு கைது ஏன்..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

zxc

 

பெண்களை இழிவாகப் பேசியதாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இந்து மத அமைப்புகள், பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் கொடுத்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு-வை முட்டுக்காடு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில்தான் குஷ்பு முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலில் வராது” - ஜெயக்குமார் விளக்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Jayakumar explained Asking for a seat for my son does not come in succession politics

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அந்த வகையில், அ.தி.மு.க சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு இன்று (21-02-24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பல்வேறு அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு பெற்றுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (21-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலுக்குள் வராது. ஏனென்றால், கடந்த 2014ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்து போட்டுள்ளார். அதனால், இது வாரிசு அரசியலில் வராது. அதிமுகவில் பற்று உள்ளவர்கள் எந்த நிலையிலும் தடம் மாறமாட்டார்கள். அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, நடிகை திரிஷா குறித்து பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.  

Next Story

“பா.ஜ.க.விற்கு கூலிக்கு மாரடிப்பவராக ஓ.பி.எஸ். இருக்கிறார்” - ஜெயக்குமார் தாக்கு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Jayakumar said OPS is a mercenary for BJP

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஓ.பி.எஸ் தரப்பினருக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இன்று (10-02-24) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் முடிந்து ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓ.பி.எஸ்ஸின் குரல் இருக்கிறது. அதனால் தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. எங்களுடைய தனித்தன்மையை பல கட்டங்களில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். பா.ஜ.கவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்துவிட்டோம். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். எங்களை நோக்கித்தான் கட்சிகள் வரும்” என்று கூறினார்.