modi

சட்டீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 11ஆம் தேதி, நவம்பர் 20 ஆம் தேதி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மூன்று தேர்தலிலும் பாஜகவே இங்கு வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ”அர்பன் மாவோயிஸ்டுகள் சுற்றிலும் ஏசி, பெரிய காரில் வளம் வருகிறார்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றார்கள் ஆனால் அவர்கள் இங்கிருக்கும் ஆதிவாசி இளைஞர்களின் வாழ்க்கையை ரிமோடி கண்ட்ரோல் வழியாக நாசமாக்குகிறார்கள். பிறகு காங்கிரஸ் அர்பன் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

Advertisment